திருப்பத்தூர் மாவட்டம் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் வீரமணி கலந்துகொண்டு 550 நபர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வட்டார வளர்ச்சி அலுவலத்திறக்கு பின்புறம் உள்ள பாரத கோயில் தெரு, அம்பேத்கர் நகர், இருளர் காலனி போன்ற பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு, தங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக முறையான குடிநீர் வசதி இல்லாத சூழ்நிலையில் வாழ்ந் துகொண்டிருப்பதாக தெரிவித்தனர். பல முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இரண்டு முறை சாலை மறியல் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி எஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.