தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு நேற்று (மே 24) முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
ரேஷன் பொருள்கள் வாங்க அலைமோதிய மக்கள்: கரோனா தொற்று பரவும் அபாயம்!
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ரேஷன் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அலைமோதியதால் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (மே 25) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொள்ள அரசு அனுமதியளித்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் இயங்கிவரும் கூட்டுறவு நியாய விலைக்கடையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
இதனால், கரோனா தொற்றுப் பரவும் என அச்சப்படும் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருள்கள் வழங்க அரசு அனுமதியளித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், காவல் துறையினர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே பொதுமக்கள் இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.