திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள நாச்சியார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விநாயகம். இவர் நேற்றிரவு (நவ. 30) அவரது நிலத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித்திருந்ததைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அங்கு வந்த பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் வனத் துறையினரிடம் அந்தப் பாம்பை ஒப்படைத்தனர்.