திருப்பத்தூர்:திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள போஸ்கோ நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, சிவராஜ் பேட்டை, ஏரிக்கரை பகுதி, திருப்பத்தூர் - வேலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணிகள் நீர்வளத் துறையின் சார்பாக தொடங்கியது.
முன்னதாக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 114 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கும் பணி தொடங்கியது. இதன்படி அவர்களாகவே அப்புறப்படுத்திக் கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதில் ஒரு தரப்பினர் நோட்டீஸ் வாங்க மறுத்ததால், அனைவருக்கும் பொதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக அறிவிப்பு செய்து, நேற்றைய முன்தினம் அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.