திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாணக்கார தோப்பில் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இப்பகுதியில் கழிவறை வசதி இல்லாததால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் அங்குள்ள கிணற்றில் கழிவுநீர் கலப்பதால், நோய் பரவும் நிலை உள்ளது.
பட்டியலின மக்களை புறக்கணிக்கிறதா தேவலாபுரம் ஊராட்சி? - பொதுமக்கள் நூதன போராட்டம்
ஆம்பூர் அருகே கழிவறை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகித்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் பட்டியலின மக்கள் அதிகம் வசிப்பதால், ஊராட்சி மன்ற நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க:'பெண்கள் பாதுகாப்பிற்கான செம திட்டம்' - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி