தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேரம் கனமழை - நகர பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் - government bus damage

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்ய நிலையில், நகர பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால் மழை நீர் பேருந்துக்குள் கொட்டியது.

ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் காற்று இடியுடன் கூடிய கனமழை
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் காற்று இடியுடன் கூடிய கனமழை

By

Published : May 5, 2022, 7:03 AM IST

Updated : May 5, 2022, 11:26 AM IST

திருப்பத்தூர்:தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவலாபுரம், சோலூர், விண்ணமங்கலம் ,மின்னூர், உமராபாத், மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் திடீரென சுமார் ஒரு மணி நேரம் காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோடை வெயிலினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்த நிலையில், தற்போது பெய்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேரம் கனமழை - நகர பேருந்துக்குள் கொட்டிய மழை நீர்

மேலும் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் நகர பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து இருந்ததால், மழை நீர் நேரடியாக பேருந்துக்குள் கொட்டியது. இதனால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

Last Updated : May 5, 2022, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details