தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வழியுறுத்தி சக ஊராட்சி செயலாளர்கள் ஒன்றிய அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டடோர்
போராட்டத்தில் ஈடுபட்டடோர்

By

Published : Nov 3, 2020, 5:29 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிம்மியம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருபவர் ஜீவஜோதி. இவர் கடந்த 27ஆம் தேதி, அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்து என்பவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள பொது ஆழ்துளை கிணறுக்கு அருகாமையில் தனிநபர் ஒருவர் அமைக்கும் ஆழ்துளை கிணறுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தார். அது மட்டுமல்லாது, தனிநபர் அமைக்கும் ஆள்துளை கிணற்றால் ஊருக்குப் பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போகும் சூழல் ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ஊருக்குப் பொதுவான ஆழ்துளை கிணறு அருகாமையிலேயே கடந்த 27ஆம் தேதி தனிநபர் ஒருவர் ஆழ்துளை அமைத்துள்ளார். இதனால் வைரமுத்து நேரடியாக ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று, எதற்காக அனுமதி அளித்தார்கள் எனக் கேட்டு தனது கையிலிருந்த செல்போனை வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் ஜீவஜோதி, வைரமுத்துவின் செல்போனை பறிக்க முயன்றுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. அதுசமயம் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காயமடைந்த வைரமுத்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற செயலாளர் ஜீவஜோதி மீது வைரமுத்து அளித்த புகாரின் பேரிலும், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்துவின் மீது ஜீவஜோதி அளித்த புகாரின் பேரிலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விசாரணையின் பேரில், ஊராட்சி மன்ற செயலாளர் ஜீவஜோதி நேற்று (நவ.02) தற்காலிக பணியிடை நீக்கம் செய்பட்டார். இதனால் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட 25க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற செயலாளர்கள், இதனை திரும்பப் பெற கோரியும் மீண்டும் ஊராட்சி செயலாளர் ஜீவஜோதியை பணியில் அமர்த்தும் படி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:10%ஆக போனஸ் குறைப்பு: போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details