திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.
இந்நிலையில் இத்தேர்தலில் வாக்களித்த வந்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டியன் தனது வார்டில் வாக்களித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசியதாவது, 'நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் கிராமத்தில் உள்ள சிலரின் காழ்ப்புணர்ச்சியால் தலைவராக பதவியேற்காமல் மக்களுக்கு சேவை முடியவில்லை உள்ளேன்' என்று தெரிவித்தார்.
இந்துமதி பாண்டியன், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக தேர்தலில் யாரும் போட்டியிடாததால் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.