திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் செல்வி. இவர், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் சொந்தத் தேவைக்காகக் கடனாக பணம் பெற்றிருந்தார். அதற்கு வங்கி காசோலையை வைத்து பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தை திரும்பி தரக்கோரி தனியார் நிதி நிறுவனர் கோபால் கிருஷ்ணன், குப்புசாமி ஆகிய இருவரும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவியை மிரட்டி வந்துள்ளனர்.
இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என, ஜாதியைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஆக. 14) செல்வியை தனியார் மண்டபத்திற்கு வரவழைத்து, பிசிஆர் சட்டத்தின் கீழ் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும். பாஜக கட்சியிலிருந்து விலகி, ஊராட்சி மன்ற தலைவி என்ற பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும்.
மிரட்டும் தனியார் நிதி நிறுவனர்: தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்றத் தலைவி! அப்போதுதான் உன்னை நாங்கள் உயிருடன் விடுவோம். இல்லையென்றால், கனரக வாகனத்தை வைத்து உன் குடும்பத்தினரை கொன்று விடுவோம் என்று தனியார் நிதி நிறுவனர் மிரட்டி உள்ளார். இதில் மனமுடைந்த செல்வி, அவரது கணவர் ரமேஷ் ஆகிய இருவரும் நிதி நிறுவனர் கோபால் கிருஷ்ணன் வீட்டின் முன்பு மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது திடீரென்று செல்வி மயங்கி கீழே விழுந்ததால், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட 8 பேர் கைது