திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த மாதனூர் உள்ளி இணைக்கும் பாலாற்று மேம்பாலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்துவந்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் ஒருபகுதி அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் கடந்த மூன்று மாத காலமாக மாதனூர் சுற்றியுள்ள உள்ளி, தோட்டாளம், கோபம்பட்டி, வளையல் காரப்பட்டி, குளிதிகை, செம்பேடு வளத்தூர் மேல்பட்டி அழிஞ்சிகுப்பம், கொத்தகுப்பம், ரெட்டிமாங்குப்பம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொழிற்சாலைகளுக்கும், மாணவர்கள் பள்ளிக்கும் செல்வதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரக்கூடிய பள்ளிகொண்டா பாலத்தைப் பயன்படுத்திவந்தனர்.
எனவே மாதனூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உள்ளி குடியாத்தம் வழியாகச் செல்லும் உள்ளூர் பேருந்துகள், ஆந்திர மாநிலத்திற்கு காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு முற்றிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.
அதன்பின் அப்பகுதி மக்கள் உடனடியாகத் தற்காலிக சாலை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டும் சட்டப்பேரவை உறுப்பினர், பொதுப்பணித் துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.
கடந்த ஆண்டுக்குள்ளே சாலைப் பணியை முடித்துத் தருவதாக ஆம்பூர் அருகே நடைபெற்ற விழாவில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ. வேலு உறுதியளித்திருந்தார்.