தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
உழவர் சந்தையை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - உழவர் சந்தையை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருப்பத்தூர்: கரோனா தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் விதமாக உழவர் சந்தையை இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
![உழவர் சந்தையை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! market](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11506998-35-11506998-1619157258499.jpg)
market
கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கரோனா பரவலை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையை தனியார் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.