தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கருணாநிதியின் சத்தியவாக்காக இருந்தவை அண்டப் புளுகு ஆகாசப் புளுகுதான்!' - மு.க.ஸ்டாலின், உதயநிதியை கலாய்த்த ஓபிஎஸ்

அண்டப் புளுகு; ஆகாசப் புளுகு - இவைதாம் கருணாநிதியின் சத்தியவாக்காக இருந்தவை. அதைத்தான் மு.க. ஸ்டாலினும், உதயநிதியும் மேடைக்கு மேடை பேசி மக்களை நம்பவைத்துள்ளனர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், உதயநிதியை கலாய்த்த ஓபிஎஸ்
மு.க.ஸ்டாலின், உதயநிதியை கலாய்த்த ஓபிஎஸ்

By

Published : Oct 2, 2021, 6:25 PM IST

திருப்பத்தூர்: மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் இன்று (அக். 2) நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "கடந்த தேர்தலில் ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம்.

மு.க. ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்த ஓபிஎஸ்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். அவையெல்லாம் காற்றிலேயே பறந்துகொண்டிருக்கின்றன.

அண்டப் புளுகு; ஆகாசப் புளுகு - இவைதாம் கருணாநிதியின் சத்தியவாக்காக இருந்தவை. அதைத்தான் மு.க. ஸ்டாலினும், உதயநிதியும் மேடைக்கு மேடை பேசி மக்களை நம்பவைத்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க:உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details