தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேரம் பிடிக்க தாறுமாறாக ஓட்டும் பேருந்து ஓட்டுநர்களால் தொடரும் விபத்து - ஒருவர் பலி - road accident involving bus drivers who were speeding to catch time

திருப்பத்தூர் அடுத்த சாலை நகர்ப்பகுதியில் தாறுமாறாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவி விபத்தில் சிக்கினர். கணவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நேரம் பிடிக்க தாறுமாறாக ஓட்டும் பேருந்து ஓட்டுநர்களால் தொடரும் விபத்தில் ஒருவர் பலி
நேரம் பிடிக்க தாறுமாறாக ஓட்டும் பேருந்து ஓட்டுநர்களால் தொடரும் விபத்தில் ஒருவர் பலி

By

Published : Jan 25, 2022, 6:36 PM IST

வாணியம்பாடியிலிருந்து ஊத்தங்கரை வரை சுமார் 300 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீரற்ற சாலையில் தனியார் பேருந்துகளும் அரசுப் பேருந்துகளும் யார் முன்னால் சென்று நேரம் பிடிப்பது என்கிற போட்டியில் பேருந்துகளை தாறுமாறாக ஓட்டி, அவ்வப்போது சாலை விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் அடுத்த ஜெய்பீம் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் ஏகாம்பரம்(62) இவர் ஜோலார்பேட்டை பகுதியில் சத்துணவு அமைப்பாளராகப் பணி புரியும் தன்னுடைய மனைவி தேன்மொழியை(55) விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டை நோக்கி சாலைநகர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது திருப்பத்தூர் நோக்கி வந்த அரசுப்பேருந்து இடித்து விபத்துக்குள்ளானார்கள். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததில், கணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுரை அரசு பணியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details