தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - Tiruppattur Crime news

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே நேற்றிரவு (ஜூன்.05) மின்சாரம் தாக்கி மேஸ்திரி ஒருவர் உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு

By

Published : Jun 6, 2021, 8:33 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (40). இவர் ஓசூரில் கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பிரித்தி (6), சஞ்சீவ் (3), ஆறு மாத ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி மாலா மூன்றாவது பிரசவத்திற்கு கர்நாடக மாநிலம் ராயதுற்கா பகுதிக்குச் சென்றுள்ளதால், இவர் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர் தனது வீட்டிலிருந்த மின்விளக்கு எரியாததைக் கண்டு சரிசெய்யும் பொழுது, மழை காரணமாக ஏற்கனவே சுவர் ஈரமாக இருப்பதை கவனிக்காததால், மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்துள்ளார்.

இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் சடலத்தைக் கைப்பற்றி வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details