திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டையிலிருந்து தைல மரங்களை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர், கொத்தக்கோட்டை கூட்டு சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டரில் பயணம் செய்த மரம் வெட்டும் தொழிலாளி ஐயப்பன் (வயது 31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் டிராக்டர் ஓட்டுநர் சரவணன் (வயது 28) படுகாயங்களுடன் கவலைக்கக்கிடமான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.