மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 40 வயது தொழிலாளி ஒருவர் தைராய்டு பாதிப்பு காரணமாக கடந்த 15 நாள்களுக்கு முன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து இருமல், சளி, காய்ச்சல் இருந்ததால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது கரோனா அறிகுறியாக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் வேலூர் மாவட்ட நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கரோனா அறிகுறியுடன் வெளிமாநில நபர் அனுமதி! - CORONA SYMPTOM 1 PATIENT ADMITTED IN GH
திருப்பத்தூர்: சளி, காய்ச்சல் அறிகுறியுடன் மேற்கு வங்கத் தொழிலாளி ஒருவர் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CORONA SYMPTone patient admitted in gh with corona symptomsOM 1 PATIENT ADMITTED IN GH
கரோனா அறிகுறியுடன் வெளிமாநில நபர் அனுமதி
இதனையடுத்து தனி ஆம்புலென்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அவர் அடுக்கம்பாறை அரசுத் தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்காக கிண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா - எண்ணிக்கை 9ஆக உயர்வு!