தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் - திருமணமான பெண்ணை திருமணம் செய்த நபர் சடலமாக மீட்பு

திருமணமான பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த நபர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான பெண்ணை திருமணம் செய்த நபர் சடலமாக மீட்பு
திருமணமான பெண்ணை திருமணம் செய்த நபர் சடலமாக மீட்பு

By

Published : Mar 17, 2022, 11:09 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி(20). இவருக்கும் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், உமா மகேஸ்வரி, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த சுகுவானம்(24) என்பவருடன் உமா மகேஸ்வரி பழகி, அவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதனைக் கண்டித்த அருண் சுகுவானத்தின் உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில் இருப்பு பாதையில் சடலம் ஒன்று இருப்பதாக ரயில்வே துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அதனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அது சுகுவானம் என்பதும் அவர் நேற்று முதல் காணவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் சுகுவானத்துடன் தொடர்பிலிருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு அருணையும் தேடி வருகின்றனர். திருமணம் ஆன பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பூசாரி மட்டுமே தீ மிதிக்கும் தாளவாடி குண்டம் விழா

ABOUT THE AUTHOR

...view details