தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது - எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது

ஆம்பூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

By

Published : Jan 27, 2022, 1:33 PM IST

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்.

இதனால் அச்சத்தில் சிறுமி கூச்சலிடத் தொடங்கியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டனர்.

பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரைக் கைது செய்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 65 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:விளையாட்டு வளாகத்திற்கு திப்பு சுல்தானின் பெயர்...! வாளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details