தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல்! - திருப்பத்தூர் பகுதியில் கடைகளுக்கு சீல்

திருப்பத்தூர்: வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை மீறி திறந்துவைத்திருந்த மளிகைக் கடை உள்பட 10 கடைகளுக்கு பேரூராட்சி அலுவலர்கள், வருவாய்த் துறையினர் சீல்வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டச் செய்திகள்  திருப்பத்தூர் சமீபத்தியச் செய்திகள்  10 கடைகளுக்கு சீல்  திருப்பத்தூர் பகுதியில் கடைகளுக்கு சீல்  thirupathur district news
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல்

By

Published : Apr 26, 2020, 3:29 PM IST

கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று பகுதிகளையும் 100 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என மாவட்ட ஆட்சியர் சிவனருள் அறிவித்துள்ளார்.

இந்தப்பகுதி மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு பொது விநியோகப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வாகனங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டுவருகின்றன. இந்தச் சூழ்நிலையில், இன்று பொதுமக்கள் தேவையின்றி ஆங்காங்கே சுற்றித்திரிந்த வண்ணம் இருந்தனர்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திறந்திருந்த 10 கடைகளுக்குச் சீல்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகளை வணிகர்கள் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் இன்று சிலர் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்துவந்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை மீறி திறந்திருந்த மளிகைக்கடை, பேக்கரி, சலூன் கடைகள் உள்பட 10 கடைகளுக்கு பேரூராட்சி அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் சீல்வைத்தனர். மேலும், அப்பகுதியில் சுற்றித்திரிந்த பொதுமக்களை வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:இரவில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்: உறுதிமொழி எடுக்கவைத்த போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details