வேலூர்:காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையிலான காவலர்கள் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒடிசா மாநிலம், புபனேஷ்வரில் இருந்து வந்த பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு ரயிலில் D2 கோச்சில் சோதனை மேற்கொண்டபோது, கழிவறை அருகே மூன்று பைகளில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.