தமிழ்நாடு

tamil nadu

ஆந்திராவில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

By

Published : Oct 25, 2022, 12:56 PM IST

ஆந்திராவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
ஆந்திராவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

திருப்பத்தூர்: ஆந்திராவின் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கும், வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே சனிக்கிழமை (அக் 22) அன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாணவர்கள் பலர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். மேலும், ஆந்திராவில் சுங்கச்சாவடியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சாலை மறியலிலும் ஈடுப்பட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆந்திர சுங்கச்சாவடி ஊழியர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்களும் மோதல்

ABOUT THE AUTHOR

...view details