திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டி மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப திருப்பத்தூர் மாவட்ட பொதுத் திருப்பம் (முன்னுரிமை அல்லாத) விண்ணப்பதாரர்கள், இரவு காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு! - tirupattur
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி, வழி காட்டும் மைய அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த பணிக்கு கல்வித் தகுதி, படிக்கவும் எழுதவும் முடியும் (5ஆம் வகுப்பு தேர்ச்சி), வயது வரம்பு 01.07.2022 தேதியின் படி 18க்குள் இருக்க வேண்டும் எனவும், (OC-32, BC &BCM & MBC / DNC-34, SC& SC(A) & ST-37), மேற்கண்டவாறு, தகுதியுடையவர்கள் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன்,10.01.2023 முதல் 31.01.2023 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பிரிவுக்கு நேரில்/அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும், என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!