தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்பூர் நூலகத்தில் புத்தகம் வைக்க இடமில்லாமல் தவிக்கும் அவலநிலை! - Ambur library issue

ஆம்பூரில் புத்தகங்கள் வைக்க இடம் இல்லாமல் தவிக்கும் நூலகம். மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன் கருதி உடனடியாக தனி நூலகம் அமைக்க ஏற்பாடுகள் செய்ய வாசகர்கள் மற்றும் பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூலகத்தில் புத்தகம் வைக்க இடமில்லாமல் தவிக்கும் மாணவர்களின் அவலநிலை
நூலகத்தில் புத்தகம் வைக்க இடமில்லாமல் தவிக்கும் மாணவர்களின் அவலநிலை

By

Published : Feb 5, 2023, 3:59 PM IST

ஆம்பூர் நூலகத்தில் புத்தகம் வைக்க இடமில்லாமல் தவிக்கும் அவலநிலை!

திருப்பத்தூர்:தமிழ்நாட்டில் அந்நிய செலாவணியை அதிக அளவில் ஈட்டித்தரும் நகரங்களில் மிக முக்கிய நகரமாக விளங்குவது, ஆம்பூர். இந்த ஆம்பூரில் 10க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 1 தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்நிலையில் 1927ஆம் ஆண்டு ஆம்பூர் பகுதியில் பொது நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

பின்னர் பல்வேறு காரணங்களில் நூலகம் ஆங்காங்கே இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளாக தனியார் கட்டடத்தில் வாடகையில் இயங்கி வந்த நிலையில், தற்போது ஆம்பூர் பகுதியில் உள்ள நகராட்சிப் பள்ளி வகுப்பறையில் இயங்கி வருகிறது. மேலும் நூலகத்தில் 52ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப் போதிய இடம் இல்லாமல் இருப்பதாகவும், ஏற்கனவே ஆம்பூர் பகுதியில் நூலகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனைப் பயன்படுத்துபவர்கள் தெரிவித்தனர்.

தற்போது நூலகம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட அரசு துவக்கப்பள்ளி மேல்தளத்தில் போதிய வசதியில்லாமல் வைத்துள்ளதாகவும் மேலும் நூலக வளாகத்தின் அருகே சிலர் குடித்து விட்டு காலி மதுபாட்டில்களை அங்கேயே விட்டுசெல்வதாக நூலகத்தை பயன்படுத்துபவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூர் நூலகர் தென்றல் முருகன் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து தனியார் கல்லூரி பேராசிரியர் கோவிந்தராஜ் கூறுகையில், "ஆம்பூர் பகுதியில் சரிவர நூலகம் இல்லாததால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆம்பூர் பகுதியில் நூலகத்தை அமைத்துத் தர வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: "கூடா நட்பு கேடாய் முடியும்": நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது ஏற்பட்ட விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details