தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல் எதிரொலி: தொடர் மழையால் நிரம்பும் அணைகள்! - தொடர் மழையால் நிரம்பும் அணைகள்

திருப்பத்தூர்: நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆண்டியப்பனூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Nivar storm : dams filled with continuous rain!
Nivar storm : dams filled with continuous rain!

By

Published : Nov 26, 2020, 7:01 PM IST

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் ஓடை நீர்த்தேக்கம் உள்ளது. இங்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெய்த மழையினால் அணை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனையடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் நிவர் புயலால் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் 8 மீட்டர் கொண்ட ஆண்டியப்பனூர் அணையின் நீர்மட்டம் தற்போது 7 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நாளை (நவம்பர் 27) அல்லது நாளை மறுநாள் (நவம்பர் 28) அணை முழுவதுமாக நிரம்பிவிடும் என திருப்பத்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை உதவி அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: 63 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டடம் இடிந்து விழும் அபாயம்

ABOUT THE AUTHOR

...view details