தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் சடலமாக மிதந்த இரவு நேர காவலாளி: காவல் துறையினர் விசாரணை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில், இரவு காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவலாளி
காவலாளி

By

Published : Jun 29, 2020, 3:43 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பி.ஏ.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜ் (58). இவருக்கு இரண்டு மனைவிகள், ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில், முதல் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துவிட்டார்.

இரண்டாவது மனைவி, திருநெல்வேலியில் உள்ள தாய் வீட்டில், தனது ஒரு மகளுடன் வசித்து வருகிறார். சிராஜ், ஆம்பூரில் இயங்கிவரும் தனியார் குடோன்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் இரவுநேர காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், அவர் தனியாகக் குடியிருந்த வீட்டில், குடிநீருக்காக அமைக்கப்பட்டிருந்த 60 அடி ஆழமும் மூன்று அடி அகலமும் கொண்ட கிணற்றில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சடலமாக இறந்து கிடந்துள்ளார்.

தனது தந்தையைப் பார்க்க வந்த இளைய மகன் சம்சுதீன், வீட்டில் தந்தையின் சைக்கிள், செருப்பு உள்ளிட்டவை மட்டும் இருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினருடன் இணைந்து வீட்டிற்குள் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் முன் இருந்தக் கிணற்றில், சிராஜ் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்சுதீன், அது தொடர்பாக ஆம்பூர் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் காவல் துறையினர், சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு இறந்தவரின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details