திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அடுத்த மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் மகன் அச்சுதன் (31). இவர் ஏலகிரி மஞ்சக்கொல்லை புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த நந்தினி (21) என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
காதல் திருமணம் செய்த இளைஞரை தாக்கிய பெண் வீட்டார்! - Tirupattur Latest News
திருப்பத்தூர் : காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் நடுவழியில் தாக்கிவிட்டு பெண்ணுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். கோவை ஒன்டிபுதூர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரை பெண்ணின் உறவினர்கள் ஜீவேந்திரன், பெண்ணின் தாயார் அனுராதா உள்பட ஏராளமானோர் விரட்டிப் பிடித்து நடுவழியில் புதுமாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு பெண்ணுடன் மாயமாகியுள்ளனர்.
காதல் திருமணம் செய்த அச்சுதன் இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.