திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகர் 4ஆவது தெருவிலுள்ள தனியார் கட்டடத்தில், புதிதாக தொடங்கவுள்ள தீயணைப்பு அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சிவனருள் திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் 35 ஆவது மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தீயணைப்புத் துறைக்காண மாவட்ட அலுவலகம் வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலகம் திறக்கப்பட்டது.