தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலுக்குள் சரிந்து விழுந்த வேப்பமரம் - உயிர் தப்பிய பக்தர்கள் - கோயிலுக்குள் சரிந்து விழுந்த வேப்ப மரம்

ஆம்பூர் அருகே உள்ள பழமை வாய்ந்த நாகநாத சுவாமி கோயிலில், மின் கம்பத்தின் மீது வேப்பமரம் விழுந்த விபத்தில் நல்வாய்ப்பாக பக்தர்கள் உயிர் தப்பினர்.

கோயிலுக்குள் சரிந்து விழுந்த மரம்
கோயிலுக்குள் சரிந்து விழுந்த மரம்

By

Published : Mar 1, 2022, 6:52 PM IST

திருப்பத்தூர்:ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாகநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா, நாளை (மார்ச் 2) நடைபெறவுள்ளது. பிரதோஷ வழிபாடு இன்று (மார்ச் 1) நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கோயில் வளாகத்திலுள்ள சுமார் 15 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று திடீரென சரிந்து அருகாமையிலுள்ள மின் கம்பதின் மீது சாய்ந்தது. இதனால், உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனைக் கண்ட பக்தர்கள் கோயில் வளாகத்தில் இருந்து ஓடினர்.

இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கோயிலுக்குள் சரிந்து விழுந்த மரம்

மேலும், மின்சாரத்துறை பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதோஷம், சிவராத்திரி வழிபாட்டிற்காக கோயில் வளாகத்தில் பக்தர்கள் குவிந்து வந்த நிலையில், திடீரென மின் காம்பதின் மீது மரம் சாய்ந்து விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல சிறிது நேரம் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையும் படிங்க:நியாயவிலைக் கடைகள் செயல்படும் நேரம் நிர்ணயம்

ABOUT THE AUTHOR

...view details