தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 4 சவரன் நகை கொள்ளை! - robbery

ஆம்பூர் அருகே மாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி கொள்ளை போன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 4 சவரன் நகை கொள்ளை
கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 4 சவரன் நகை கொள்ளை

By

Published : Jun 7, 2022, 6:05 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இன்றும் நாளையும் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில், நேற்று(ஜூன் 6) இரவு கோயிலில் இருந்த மாரியம்மன் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்ய கோயில் பூசாரி கோயிலை திறந்த போது, கருவறையில் இருந்த அம்மன் சிலையில் இருந்த 4 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக இதுகுறித்து கோயில் பூசாரி ஊர் மக்களிடம் தெரிவிக்கையில், இதுகுறித்து வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் நாட்டாமை பழனி என்பவர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் இக்கொள்ளைச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை.. இந்தா வாங்கிக்கோ... ஆன்லைன் லோன் மோசடியில் சிக்கித் தவிக்கும் இளம்பெண்கள், இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details