திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல் துருகம் காப்புக்காடு பகுதிகளான மிடடாளம், பைரப்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட 4 இடங்களில், வனப்பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கோடை வெயிலினால் காய்ந்து கிடந்த வனப்பகுதி அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீயால் மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.
அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீ : ஒரு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்! - ஆம்பூர் அருகே வனப்பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீயினால் சுமார் 1 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீயினால் ஒரு ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.
![அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீ : ஒரு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்! தெரியாத நபர்கள் வைத்த தீயினால் பற்றி எரிந்த அரங்கல் துருகம் காப்புகாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6611849-thumbnail-3x2-fire.jpg)
தகவல் அறிந்து சென்ற ஆம்பூர் வனத்துறையினர் 2 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மத்தூர் ,தேவுடு கானாறு பகுதியில் வனப் பகுதிக்கு தீ வைத்துவிட்டு வனப்பகுதியில் இருந்து வரும் வன விலங்குகளை வேட்டையாடி வந்த சின்ன கொல்லகுப்பம் பகுதியைச் சேர்ந்த அபிமன்னன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.