தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 3, 2023, 4:46 PM IST

ETV Bharat / state

வாணியம்பாடியில் தேசிய உருது புத்தக கண்காட்சி!

வாணியம்பாடி இஸ்லாமிய கலைக் கல்லூரியில் நடைபெற்ற 25-வது தேசிய உருது புத்தக கண்காட்சியை விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் தொடங்கி வைத்தனர்.

வாணியம்பாடியில் தேசிய உருது புத்தக கண்காட்சி
வாணியம்பாடியில் தேசிய உருது புத்தக கண்காட்சி

வாணியம்பாடியில் தேசிய உருது புத்தக கண்காட்சி

திருப்பத்தூர்:வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் கலைக் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வாணியம்பாடி முஸ்லீம் கல்வி சங்கம் மற்றும் இந்திய அரசின் உருது மொழி வளர்ச்சிக்கான தேசிய ஆணையம் இணைந்து தேசிய அளவிலான உருது புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று(ஜன.3) முதல் 11.01.2023 வரை தொடர்ந்து 9 நாட்கள் வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட உருது பதிப்பாளர்கள் தங்களது புத்தகங்களை 100 புத்தக அரங்குகள் அமைத்து விற்பனைக்காக வைத்துள்ளனர்.

இந்த புத்தக கண்காட்சியை இன்று வாணியம்பாடி தோல் தொழிலதிபர்கள் பலர் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும், இந்த புத்தக கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:திமுக இளைஞரணியில் 9 பொறுப்பாளர்கள் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details