திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி தற்போது பரோலில் வந்துள்ளார். இந்நிலையில் 5ஆவது முறையாக அவரது பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நளினி தனது தாய் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். இதனையடுத்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இன்று (மே28) மாலை நளினியை சந்தித்து பேசினார். முன்னதாக அவர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனையும் சந்தித்து பேசினார்
நளினி வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை அடுத்து மீதம் உள்ள 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது.