முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையிலுள்ள நளினி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையைக் காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வந்தார்.
நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு - ராஜிவ் காந்தி கொலை வழக்கு
தனது தாயாரின் உடல்நிலை காரணமாக 30 நாள்கள் பரோலில் வந்த நளினிக்கு மேலும் 30 நாள்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு
30 நாள் பரோல் நீட்டிக்கக் கோரி நனிளியின் தாயார் பத்மா தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கைவைத்ததைத் தொடர்ந்து நளினிக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓபிஎஸ்ஸின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!