திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஊரடங்கு தடையை மீறி அனுமதியின்றி நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.
தடையை மீறி போராடிய நா.த.க.வினர் 20 பேர் கைது! - Naam Tamizhar party protest
திருப்பத்தூர்: ஆம்பூரில் ஊரடங்கு தடையை மீறி அனுமதியின்றி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அப்போது ஆம்பூர் பேருந்துநிலையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் 20 பேரை நகர காவல் துறையினர் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் பேருந்துநிலையம் அருகில் இருக்கக்கூடிய ரவுண்டானா பகுதியில் நீட் தேர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இதனால் தொடர்ந்து தமிழ்நாட்டில் மாணாக்களின் இறப்பு அதிகரித்துக் கொண்டேவருகிறது என்ற கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய்கள் பதிப்பது தற்காலிகமாக நிறுத்திவைப்பு!