திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னகண்ணன். இவர் பெரியவரிகம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான 6 பசுக்களை நேற்று (ஏப்.21) மாலை மேய்ச்சலுக்காக பெரியவரிகம் ஏரிகரை பகுதிக்கு அனுப்பியுள்ளார்/
ஏரிக்கரையில் புதர் பகுதியில் இருந்து பயங்கரமாக சத்தம் கேட்டதையடுத்து, அங்கு இருந்தவரகள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மர்ம பொருள் ஒன்றை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் தாடை கிழிந்து ரத்த வெள்ளத்தில் பசு பரிதவித்துள்ளது.