வேலூர்:நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி அலமேலு கணவர் இறந்த நிலையில் தனியாக ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக சுமார் ஒன்பது ஆடுகள் உள்ளன. வழக்கம்போல் நேற்று ஆடுகள் அனைத்தையும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மாலை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டியுள்ளார்.
பின்னர் காலை வந்து பார்த்த போது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஒன்பது ஆடுகளும் மர்ம விலங்கு கடித்து பலியாகி உள்ளன. தகவலின் பேரில் திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :தர்மபுரியில் அடையாளம் தெரியாத விலங்கு கடித்து 11ஆடுகள் பலி!