திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் 23வது மாநாடு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், 2005ஆம் ஆண்டு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியில் என்னென்ன சம்பவம் நடந்துள்ளது, எத்தனை பேர் இறந்தார்கள், இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகிறது என்பது குறித்து பட்டியலிட்டு துண்டுப்பிரசுரம் வழங்கினோம். பள்ளியின் அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும், பள்ளியை அரசே நடத்த வேண்டும் என்று சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம்.
அப்போது நடைபெற்ற போராட்டம் தற்போது சரி என்று நிரூபணமாகி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒரு ஸ்ரீமதி மட்டுமல்ல, பல பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் தொடர்ச்சியாக கொலைகள் நடைபெற்று வருகிறது.