கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், கல்யாணராமனைக் கைதுசெய்ய வலியுறுத்தியும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு: வாணியம்பாடியில் இஸ்லாமியர்கள் போராட்டம் - tirupattur district news in tamil
நபிகள் நாயகம் குறித்து கோவை மேட்டுப்பாளையத்தில் அவதூறாகப் பேசிய பாஜக கல்யாணராமனை கைதுசெய்ய வேண்டும் எனக் கூறி வாணியம்படி பகுதியில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு: வாணியம்பாடியில் இஸ்லாமியர்கள் போராட்டம் muslim people protest and demand to arrest kalyanaraman](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10454530-196-10454530-1612152865606.jpg)
நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேச்சு; வாணியம்பாடியில் இஸ்லாமியர்கள் போராட்டம்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வாணியம்பாடி நகர காவலர்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால், சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:நபிகள் நாயகம் குறித்து இழிவு பேச்சு - பாஜகவினர் இஸ்லாமியக் கட்சிகள் இடையே கைகலப்பு!