திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 783 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருப்பத்தூரில் நகராட்சி உதவி செயற் பொறியாளருக்கு கரோனா
திருப்பத்தூர் : வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளர் மற்றும் ஆணையாளர் கார் ஓட்டுநர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்பூர் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 519 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் கரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த நகராட்சி உதவி செயற்பொறியாளர் சம்பத், ஆணையாளரின் கார் ஓட்டுநர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் முழுவதிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அங்கு பணி புரியும் அனைத்து அலுவலர்கள்,பணியாளர்கள் பொதுமக்களுக்கு வெப்பத்தன்மை கண்டறியப்பட்டு ஆணையாளர் சென்னகேசவன் கபசுர குடிநீர் வழங்கினார் .