தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதித்த பெண் பிறந்த குழந்தையுடன் தப்பியோட்டம்! - Tirupattur latest news

திருப்பத்தூர்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கபட்ட பெண், பிறந்த குழந்தையுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் மருத்துவமனை
கோவிட் மருத்துவமனை

By

Published : May 25, 2021, 10:42 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சபீர். இவருக்கு ஜீனத் என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ள நிலையில், கடந்த வாரம் அவரது மனைவி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஐந்தாவது முறையாகப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன் ஜீனத்திற்கு குழந்தை பிறந்தது. முன்னதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு இன்று (மே.25) வெளியானது. அதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவரை பிரசவப் பிரிவிலிருந்து கரோனா பிரிவிற்கு மாற்ற அழைத்துச் சென்றபோது, மருத்துவமனையிலிருந்து ஜீனத் கைக்குழந்தையுடன் தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details