திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த புத்தூரைச் சேர்ந்தவர்கள் சங்கர் - சசிகலா (50) தம்பதியினர். விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது இளைய மகன் சக்திவேல் (25). இவர் உக்ரைனில் உள்ள முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில், ஐந்தாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார்.
கடந்த சில நாட்களாக உக்ரைன் - ரஷ்யா இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. போர்ப்பகுதியில் பகுதியில் சிக்கிய மகனின் நினைவில் ஆழ்ந்த சசிகலா பெரும் துயரில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 26) மாலை திடீரென தனது வீட்டில் சசிகலா மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக சசிகலாவை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சசிகலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தாயின் உடலை வீடியோ காலின் மூலம் பார்த்து சக்திவேல் கதறி அழுதுள்ளார்.