திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்னகசிநாய்க்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஏரி 52 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கடைசியாக இந்த ஏரி நிரம்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் சின்னகசிநாயக்கன்பட்டி ஏரி 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நிரம்பி இரு மதகுகளிலும் அதிகாலையிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.
இதனை அப்பகுதி மக்கள் பூஜை செய்து கொண்டாடி வந்த நிலையில் ஏரிக்கரை முழுவதும் நீர் நிரம்பி, ஏரிக்கரை உடையும் அபாயம் இருப்பதாக அரசு அலுவலர்களிடம் காலையில் தெரிவித்துள்ளனர். ஏரிக்கரை உடைந்தால் வக்கீல் அயர்தோப்பு, காமராஜர் நகர், மொளகரம்பட்டி ஆகியப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீரில் மூழ்கும் அபாயம்... உடையும் நிலையில் உள்ள திருப்பத்தூர் ஏரி! இதனை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் கரையைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தொடர்ந்து மழை பெய்தால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை என்னவாகும் என அப்பகுதி பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழில்: தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்