திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 68 பேர் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 275ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 587 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 80 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.