தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ஷீட் ஏற்றுமதி செய்வதாகக் கூறி கண் பார்வையற்றவரிடம் பண மோசடி - பெட்ஷீட் ஏற்றுமதி

ஆம்பூரில் கண் பார்வையற்றவரிடம் வெளிநாடுகளுக்கு பெட்ஷீட் ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி மோசடி செய்துள்ளனர்.

கண் பார்வையற்றவரிடம் பணம் மோசடி
முஸ்தாக் அஹமத்

By

Published : Jan 11, 2022, 2:14 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் முகமது புறா இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத். கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த விபத்தில் கண் பார்வை இழந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு சின்ன மசூதி தெருவைச் சேர்ந்த ஜுல்தாப் அஹமத் மற்றும் அவரது குடும்பத்தினர், வெளிநாடுகளுக்கு பெட்ஷீட் ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி முஸ்தாக் அஹமத் மற்றும் அவரது உறவினரிடம் தவணை முறையில் ரூ. 75 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால் சில ஆண்டுகளில், அசல் பணத்தை திருப்பித் தர இயலாது எனக் கூறி ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, முஸ்தாக் அஹமத், ஆம்பூர் காவல் நிலையத்தில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று புகாரளித்தார்.

இப்புகார் குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததையடுத்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஐ.ஜி, டி. ஐ .ஜி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு முஸ்தாக் அஹமத் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து , ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் ஏடிஎஸ்பி சுப்புராஜ் தலைமையில் பண மோசடி சம்பந்தமான புகார் குறித்த சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் பண மோசடி குறித்து நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் விரக்தியடைந்த முஸ்தாக் அஹமத், தனக்கு நீதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:'இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும்' - இலங்கை எம்பி செந்தில் தொண்டைமான்

ABOUT THE AUTHOR

...view details