திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புதூர் பகுதியில் ஓம் சக்தி அம்மன் கோயில் உள்ளது. நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இக்கோயிலுக்குள், நேற்றிரவு நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கிட்டத்தட்ட எட்டு பூட்டுகளை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த தங்கத் தாலி, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், வெள்ளி கிரீடம் என சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஜோலார்பேட்டையில் கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - Jolarpettai news
ஜோலார்பேட்டையில் கோயில் பூட்டை உடைத்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஜோலார்பேட்டை கோயில் பூட்டு உடைப்பு
இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் காவல் துறையினர் புகாரை ஏற்க மறுப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குற்றவாளிகளை விரைவாகப் பிடித்திட, அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: இருவர் மரணம்