தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கு: நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளி ஆஜர் - மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கு

திருப்பத்தூர்: வாணியம்பாடி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான தோட்டாமணி (எ) மணிகண்டன் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

c
c

By

Published : Sep 28, 2021, 8:49 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் செப்டம்பர் 10ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தோட்டாமணி (எ) மணிகண்டன் செப்டம்பர் 21ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து சைதாப்பேட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தோட்டாமணி (எ) மணிகண்டன்

இதனையடுத்து தோட்டாமணியை வாணியம்பாடி நகர காவல் துறையினர், இன்று (செப்.28) பலத்த பாதுகாப்புடன் வாணியம்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் காளிமுத்து வேல் முன்பு ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும் மீண்டும் அக்டோபர் 12ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தோட்டாமணியை பாதுகாப்பாக வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

வசீம் அக்ரம் கொலை வழக்கு தொடர்பாக டீல் இம்தியாஸ், தோட்டா மணி உள்பட 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மஜக மாநில நிர்வாகி படுகொலை: தேடுதல் வேட்டையில் 3 தனிப்படை

ABOUT THE AUTHOR

...view details