வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து அரசு அறிவித்த பிறகு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். இன்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவராக கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் மாதேஷ், மாவட்ட பொருளாளர் செந்தில்முருகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளராக அருண்குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளராக பத்மநாபன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் இவர்களுடன் பொறுப்பாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா முன்னிலையில் பதவி ஏற்றுகொண்டனர்.