தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளித்த அமைச்சர்...! - வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளித்த அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள்

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய அமைச்சர் நிலோஃபர் கபீல், அங்குள்ள வீதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார் .

வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல்
வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல்

By

Published : Mar 30, 2020, 11:01 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரப் பகுதியில் உள்ள 35 வார்டுகளிலும் டிராக்டர், லாரி, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட 17 வாகனங்களில் சுகாதாரத்துறை, நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 255 பணியாளர்களைக் கொண்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.

இதனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கரோனோ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று வழங்கினர். அப்போது அங்குள்ள வீதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் அமைச்சர் நிலோஃபர் கபில் ஈடுபட்டார்.

மேலும், அங்குள்ள பணியாளர்களிடம் தனித்தனியாக பிரிந்து சென்று பணிகளை மேற்கொள்ளுமாறும், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். பின்னர், அங்குள்ள வீடுகளிலிருந்த பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க 4 வீட்டிற்கு ஒருவர் மட்டுமே செல்லுமாறு கூறினார்.

வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல்

மேலும் கரோனோ வைரஸ் நோய் திருப்பத்தூர் மாவட்டத்தை நெருங்க விடாமல் பாதுகாக்க அனைவரின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:

களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்: வீதிதோறும் கிருமி நாசினி தெளிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details