திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மருத்துவ முகாமை வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "வயதான குடிமக்களை கரோனா எளிதில் தாக்கும். அதை தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உரிய மருத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன" என்றார்.