தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூரில் 42 பேருக்கு இலவச பட்டா வழங்கிய அமைச்சர் வீரமணி! - Tirupathur district news

திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை அமைச்சர் கே சி வீரமணி திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் வீரமணி நல்லதம்பி பட்டா free patta Minister Veeramani gives free patta to 42 people in Tirupathur Tirupathur Tirupathur district news Tirupathur latest news
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் வீரமணி நல்லதம்பி பட்டா free patta Minister Veeramani gives free patta to 42 people in Tirupathur Tirupathur Tirupathur district news Tirupathur latest news

By

Published : Jan 20, 2021, 1:39 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் அலுவலகத்தில் புதுபூங்குளம், ஏகே மோட்டூர், பகுதியைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சொந்தமாக வீடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை- எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 101 ச.மீ பரப்பு கொண்ட சுமார் 29,795 ரூபாய் மதிப்பில் உள்ள பட்டாக்களை 42 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இலவச பட்டா வழங்கும் நிகழ்வில் அமைச்சர் வீரமணி
மேலும் அந்த இலவச பட்டா மனையில் வருகின்ற காலத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடும் கட்டிக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் வீரமணியுடன் இலவச பட்டா பெற்ற பயனாளிகள்
இந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவன் அருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் வட்டாட்சியர் மோகன் நகர செயலாளர் டி டி குமார் நகர துணை செயலாளர் சரவணன் கிழக்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி முன்னாள் சேர்மன் அரசு மற்றும் பொதுமக்கள் கலந்து என பலர் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details